ஜான் வெஸ்லி மிகவும் குள்ளமானவர். ஜனங்கள் அவரை பரிகாசம் செய்தனர். ஆனால், தேவனோ அவரைப் பற்றி வேறொரு கணக்குப் போட்டார். உலகமெங்கும் அவரை வல்லமையாய் பயன்படுத்தினார். மேலும், தன் போதனையால் உலகத்தை அசைத்த போதகர் டி.எல்.மூடி படிப்பறிவில்லாதவர். அவர் பேசும் ஆங்கிலத்தை அநேகர் கேலி செய்வர். ஆனால், அவர் மூலம் அவருடைய ஊழியத்தினால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் பல லட்சம் பேர். இன்னும் பார்க்கப்போனால் வறுமையில் தவித்த, நோயுற்றிருந்த பால் பாங்கி சோ என்பவரை, தேவன் தெரிந்து கொண்டு கொரியா தேசத்தையே அசைக்க வைத்திருக்கிறார்.‘‘சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பை பாருங்கள். மாமிசத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அனேகரில்லை, தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளை தெரிந்து கொண்டார். “(1கொரி, 1:26, 27). தேவ அழைப்பு முழுமையுமே வித்தியாசமானது தான். இன்றைக்கு நாம் எந்த நிலையில் இருந்தாலும் சரி, இயேசு கிறிஸ்து உங்களை பாரபட்சம் பாராமல் அழைக்கிறார். காரணம் அவர் நம்மை அதிகமாய் நேசிக்கிறார். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள். (எரோ. 31:14) இயேசு