படிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது இஸ்லாம். கல்வியின் முக்கியத்துவம் குறித்து கேட்போமா! நீர் காலையில் எழுந்ததும் கல்வியில் நின்றும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்வது, நுõறு ரக் அத் தொழுவதை விடச் சிறந்ததாக இருக்கும்.மக்களுக்கு அறிவு புகட்டுவதற்காக யார் கல்வியில் நின்று, ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டானோ, அவனுக்கு 70 நபிலுடைய ஸவாவை கொடுக்கப்படும். சிந்திக்கத் தெரியாதவன் மிருகத்திலும் கேடு கெட்டவன்.மார்க்கச் சட்டமறிந்த ஒரு அறிஞர், ஆயிரம் தவசீலர்களை விட ஷைத்தானுக்கு கடின விரோதியாவார். அறிஞர்களான உலமாக்கள் நபிமார்களுடைய வாரிசுகளாவர். மார்க்கக் கல்வியின் அடிப்படை இறைநம்பிக்கையாகும். இறை நம்பிக்கையோடு அமைந்த கல்வியில் தான், இம்மை மறுமை பயன்கள் உள்ளன. சன்மார்க்கக் கல்வியை கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரிக்கின்றார்கள். மேலும் கடலில் வாழும் மீன்கள் முதல் விண், மண்ணிலுள்ள சகல படைப்பினங்களும் அவனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றன.