வட்டி வாங்கினால், ஒரு ஊரே பாழடையும் என்கிறார்கள் அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். அவர்களது கருத்தைக் கேளுங்கள்.வட்டி எவ்வளவு தான் வருமானத்தைப் பெருக்கினாலும், அதன் முடிவு குறைந்து போகக்கூடியதே. அல்லாஹ்வைப் பயந்து, (இறைவனுக்குப் பயந்து) உண்மை பேசி வியாபாரம் செய்பவர்களைத் தவிர, மற்ற வியாபாரிகள் மறுமை நாளில் பாவிகளாக எழுப்பப்படுவார்கள். வட்டி வாங்கி அதை உண்ணச்செய்பவன், அதன் கணக்கை எழுதுபவன், அதன் சாட்சியாளன் அனைவரும் பாவத்தில் சமமானவர்கள். எந்த ஊரில் வட்டியும், விபசாரமும் பெருகி இருக்குமோ, அந்த ஊர் பாழடைந்து போகாமல் இருக்காது. எவர்களிடத்தில் வட்டியும், விபசாரமும் பெருகி இருக்குமோ, அவர்கள் அல்லாஹ் வின் வேதனைக்கு தங்களைத் தயார் செய்து கொள்கிறார்கள்.வட்டியின் கொடுமை பற்றி மேற்கண்டவாறு சொன்ன அண்ணலார், வட்டி வாங்கி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும் சபிக்கவும் செய்தார்கள். வட்டி வாங்குவதை யும், கொடுப்பதையும் தவிர்ப்போமே!