இந்த மாதத்தில் என் பிள்ளைகளின் வருங்காலம் எப்படியிருக்கும்? என் கணவர் சுகம் அடைந்து விடுவாரா? என் வயது சென்ற பெற்றோரின் நிலை என்ன? என் குடும்பத்திற்கு விரோதமாக எதிர்ப்புகள் எழும்புகிறதே என்ன செய்வது என்று நீங்கள் கலங்கி கொண்டிருக்கலாம்.நம்முடைய தேவன் வல்லமையுள்ளவர். சேனைகளின் கர்த்தர், பராக்கிரமசாலி, நமக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அருளுகிறவர். இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தி வந்தவர். நம்மையும் நடத்த வல்லமையுள்ளவராயிருக்கிறார். கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதத்தில் அதிக ஆசீர்வாதத்தோடு வாடி உதவி செய்வார். பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி செல்லுவோம். ‘‘சகோதரரே! அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை. ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானைகளைத் தேடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்,” என்ற (பிலி.3:13,14) வசனம் இங்கே நினைவுகூரத்தக்கது.