உழைத்தால் பணம் சேரும் என்று மட்டுமே நினைக்கிறோம். ஆனால், உழைப்புக்கு பெரும் மதிப்பைத் தருகிறது இஸ்லாம்.உழைப்பினால் சோர்ந்த நிலையில், மாலை நேரத்தைச் சந்திப்பவன், அந்த மாலை நேரத்தை அல்லாஹ் அவனை மன்னித்த மாலை நேரமாகச் சந்திக்கின்றான். உழைப்பின் காரணமாக, செய்த பாவங்களுக்கு கூட மன்னிப்பு கிடைக்கிறது. உழைக்கும் நேரத்தில், வேலையில் தான் கவனம் இருக்கிறதே ஒழிய, பாவ எண்ணங்கள் மனதில் தலை துõக்குவதில்லை. சோம்பேறியாகத் திரிபவன் தான், ‘யாரைக் கெடுக்கலாம், இன்று உணவுக்கு வழியில்லையே! யாரிடம் திருடலாம்’ என்ற எண்ணங்களுடன் அலைகிறான். உழைக்கிறவனுக்கு இப்படியெல்லாம் சிந்திக்க நேரமிருப்பதில்லை.எனவே, கடுமையாக உழையுங்கள். நிறைய சம்பாதியுங்கள். நல்ல விஷயங்களுக்கு மட்டும் செலவிடுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியைப் பெருக்குங்கள். நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள். இறைவனின் கருணைக்கு ஆளாகுங்கள்.