கடலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் வீதியுலா நடந்தது.
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாளுக்கு, கடலுார் தேவனாம்பட்டிணம் கடற்கரையில் நேற்று முன்தினம் மாசிமகத்தையொட்டி தீர்த்தவாரி நடந்தது. அதனைத் தொடர்ந்து, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளிய உலகந்த பெருமாளுக்கும், திருவந்திபுரம் மணவாள மாமுனிக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு உலகளந்த பெருமாள், வரதராஜப் பெருமாளுக்கு திருப்பாவை சாற்றுமுறை நடந்தது. 8:00 மணிக்கு உலகளந்த பெருமாள் கருட வாகனத்திலும், வரதராஜப் பெருமாள் சேஷ வாகனத்திலும், மணவாள முனிகள் எதிர்சேவையில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் ரமேஷ்பாபு, தக்கர் சுப்த்ரா, கோவில் அர்ச்சகர் தேவநாதபட்டர், தலைமை எழுத்தர் ஆழ்வார் ஆகியோர் செய்திருந்தார்.