இந்தியாவிலேயே 5 கருவறைகள் கொண்ட கோயில் திருப்பரங்குன்றம் மட்டுமே!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2020 02:03
அவனியாபுரம் :இந்தியாவிலேயே 5 கருவறைகள் கொண்ட கோயில் திருப்பரங்குன்றம் மட்டுமே என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தமிழத்துறை சார்பில் மதுரையும், கோயில் கலைகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். துறை தலைவர் ரவி வரவேற்றார்.மேலுார் அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் மணிவண்ணன் பேசியதாவது: தாமரை மலர் வடிவத்தில் மதுரை நகர் உருவாக்கப்பட்டுள்ளது. ஊரின் நடுவில் மீனாட்சி அம்மன் கோயிலும், சுற்றிலும் தெருக்கள், நகரங்களும் உருவாக்கப்பட்டன. மதுரையில் கோயில்கள் உருவான பின்புதான் நகரம் உருவாகியுள்ளது.இந்தியாவிலேயே 5 கருவறைகள் கொண்ட கோயில் திருப்பரங்குன்றம் கோயில்தான். ஆரம்ப காலங்களில் மணல், சுண்ணாம்பு, மரம் மற்றும் சுதைகளால் கோயில் உருவாக்கப்பட்டது. கி.பி. 7ம் நுாற்றாண்டிற்கு பிறகு கற்களால் கட்டப்பட்டது.கி.பி. 2ம் நுாற்றாண்டுக்கு பிறகு பெண் தெய்வங்களுக்கு கோயில் கட்டப்பட்டது. சிவபெருமானின் 64 வடிவங்களில் 25 வடிவங்கள் மீனாட்சி அம்மன் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளன, என்றார். பேராசிரியர் கார்த்திகாதேவி நன்றி கூறினார்.