விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பத்தில் மாசி மாதத்தையொட்டி பெரியாயி உடனுறை பெரியாண்டவர் திருவிழா நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பத்தில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு பெரியாண்டவர், பெரியாயி உடனுறை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் சந்தன அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், சிதம்பரம், திருவண்ணாமலை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.