திருப்புவனத்தில் மாசி திருவிழா: அக்னி சட்டி தயாரிப்பு தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2020 10:03
திருப்புவனம்:திருப்புவனத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மாசி திருவிழாக்கள் தொடங்கியதை அடுத்து அக்னி சட்டிகள் தயாரிப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது. திருப்புவனம் பூமாரியம்மன் கோயில், லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அடுத்தடுத்து திருவிழாக்கள் நடைபெற உள்ளன.அம்மன் கோயில்களில் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் அம்மனுக்கு அக்னி சட்டி,பொம்மை, ஆயிரம்கண் பானை உள்ளிட்டவை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதற்காக திருப்புவனம் புதுார்பஜனைமடத் தெருவில் பானைகள் தயாரிப்பு பணி தொடங்கியுள்ளது. பொம்மைகள், அக்னிசட்டிகள் உள்ளிட்டவை 100 ரூபாயில்தொடங்கி 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. அக்னிசட்டிகள், ஆயிரம் கண் பானைகள் அனைத்தும் மண்ணில்செய்யப்பட்டு நிழலில் உலர்த்தப்பட்டு வர்ணங்கள் தீட்டி விற்பனை செய்யப்படுகின்றன. திருப்புவனத்தில் வரும் 24ம் தேதி திருவிழா நடைபெற உள்ளது.