Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரடையான் நோன்பு: கயிறு கட்டும் போது ... ஆண்டுதோறும் கோயிலில் திருக்கல்யாணம் நடத்துவது ஏன்? ஆண்டுதோறும் கோயிலில் ...
முதல் பக்கம் » துளிகள்
சத்தியவான் சாவித்திரி வரலாறு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சத்தியவான் சாவித்திரி வரலாறு!

பதிவு செய்த நாள்

13 மார்
2020
03:03

மந்திர தேசத்து மன்னர் அஸ்வபதி.  ஒருநாள் நாரதரிடம், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததைச் சொல்லி வருந்தினார் மன்னர். காரடையான் நோன்பு இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றார் நாரதர். அதன்படியே மன்னருக்கு பிறந்தாள் சாவித்திரி.  கல்வி, கலைகளைக் கற்றுத் தந்து வீரமங்கையாக மகளை வளர்த்தார் அவர். ஒருநாள் வேட்டைக்குப் போன சாவித்திரி, காட்டில் சாளுவ தேசத்து மன்னர் சால்வன், அவரது மனைவி, மகன் சத்தியவானைச் சந்தித்தாள்.   போரில் நாட்டை இழந்த சால்வன் காட்டில் குடில் அமைத்து வாழ்ந்தார். சால்வனும் அவரது மனைவியும் பார்வை குறை உள்ளவர்கள். அவர்களை பாசமுடன் சத்தியவான் கவனிப்பதைப் பார்த்த சாவித்திரி, அவன் மீது காதல் கொண்டாள். ‘இவரே எனக்கு ஏற்ற கணவர்’ எனத் தீர்மானித்தாள்.

விஷயத்தைத் தன் தந்தையிடம் தெரிவிக்க அவரும் சம்மதித்தார்.   மந்திர தேசம் வந்த நாரத மகரிஷிக்கு மகளின் விருப்பத்தை தெரிவித்தார் அஸ்வபதி.  ‘ சத்தியவானுக்கு அற்பாயுள் என்பதால் எமன் அவனை நெருங்கும் காலம் வரப் போகிறது.’ என எச்சரித்தார். ஆனாலும் மன உறுதியுடன் சத்தியவானைக் கணவராக அடைந்தாள் சாவித்திரி. அரண்மனை வாழ்வைத் துறந்து காட்டிற்குச் சென்றாள். மாமனார், மாமியாரைப் பரிவுடன் கவனித்தாள். காலம் வேகமாக ஓடியது. சத்தியவானின் ஆயுள் முடியும் காலம் நெருங்கியது. ஒருநாள் சாவித்திரியின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த சத்தியவானின் தலை கீழே நழுவியது.  கணவரின் உயிரை எமன் கவர்ந்து செல்வது அவளுக்கு தெரிந்தது. தன் கற்புத்திறத்தால் எமனைப் பின்தொடர்ந்தாள். இறுதியில் போராடி கணவரின் உயிரையும் மீட்டாள். அப்போது மாமனார், மாமியாருக்கு கண் பார்வை, சால்வனின் இழந்த நாடு, தன் தந்தையாருக்கு ஆண் வாரிசு என பல வரங்களை எமனிடம் பெற்றாள்.   பொதுவாக பெண்களின்  பெயருக்கு பின்னர் கணவரின் பெயரை எழுதுவது வழக்கம். ஆனால் கணவரின் மீதுள்ள பக்தியால் இவளை மட்டுமே ‘சத்தியவான் சாவித்திரி’ என அழைக்கப்படுகிறாள்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
மீன் போல துாங்காமல் ஆட்சி செய்பவள் என்பதால் தடாதகைக்கு ‘மீனாட்சி’ என்றும், சொக்கவைக்கும் அழகன் ... மேலும்
 
temple news
அம்பிகையின் சன்னதியில் கீழ்க்கண்ட பாடலை பாடுங்கள். நல்லது நடக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ... மேலும்
 
temple news
​மதுரைக்கும், சிருங்கேரி மடத்திற்கும் ஆதிசங்கரர் காலத்திலிருந்தே தொடர்புண்டு. அவர் மதுரை மீனாட்சி ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள காஞ்சி காமகோடி பீடமும், கர்நாடகாவிலுள்ள சிருங்கேரி சாரதா பீடமும் பிரசித்தியான ... மேலும்
 
temple news
* சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தலம். * மூவேந்தர் போற்றிய புண்ணியத் தலம். * பாண்டிய மன்னர்களின் தலைநகராக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar