கலசப்பாக்கம் 200 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2020 10:03
கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே, அரசு பள்ளியில், நிலத்தை தோண்டியபோது, 200 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் மற்றும் நந்தியம்பெருமான் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேல் வில்வராயநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், புதிதாக கலையரங்கம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக நிலத்தை தோண்டியபோது, சிவலிங்கம் மற்றும் நந்தியம்பெருமான் கற்சிலை இருந்துள்ளது. இது குறித்து, கலசப்பாக்கம் தாசில்தார் ராஜராஜேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தலைமையில் சென்ற வருவாய் துறையினர், கற்சிலைகளை ஆய்வு செய்தார். அப்போது, அவை, 200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவையாக இருக்கும் என தெரிவித்தனர். தொடர்ந்து அந்த கற்சிலைகளை, பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுத்தனர்.