பதிவு செய்த நாள்
18
மார்
2020
10:03
சேலம்: தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா, ஆஞ்சநேயர் விடையாற்றி உற்சவத்துடன் நிறைவடைந்தது. சேலம், ஸ்ரீமத் தியாகராஜ சுவாமிகள், வேங்கட்ரமண பாகவதர் சுவாமிகள் மகோத்சவ சபை சார்பில், சிங்கமெத்தை சவுராஷ்டிரா கல்யாண மண்டபத்தில், 84ம் ஆண்டு ஆராதனை விழா, கடந்த, 12ல் தொடங்கியது. அன்று, பஞ்ச ரத்ன கீர்த்தனையில், உஞ்ச விருத்தி ஊர்வலம் நடந்தது. மறுநாள் முதல், நேற்று வரை, தினமும் மாலை, கலைஞர்கள், தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். நிறைவு நாளான நேற்று, சேலம், அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் கும்பகோணம் சங்கரராமன், சேர்த்தலை சத்தியமூர்த்தி, திருச்சி சுவாமிநாதன், கிருஷ்ணசுவாமி ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடந்தது. இரவு, சவுராஷ்டிரா விப்ரகுல பாகவதர்களின் கோணங்கி, கோலாட்டம் நடந்தது. பின், ஆஞ்சநேயர் விடையாற்றி உற்சவத்துடன் ஆராதனை விழா நிறைவடைந்தது.