கொரோனாவில் மக்களை காக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2020 10:03
ராமேஸ்வரம்: கொரோனாவில் இருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் புரோகிதர்கள் தன்வந்திரி யாகம் நடத்தினர்.உலக நாடுகளை திணறடிக்கும் கொரோனா வைரஸ்சில் பலர் பலியாகினர். இதனால் வர்த்தகம், பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. எனவே கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாத்து, நாடு வளம் பெற வேண்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த புரோகிதர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் தன்வந்திரி யாகம், மிருத்யுஞ்சய யாகம் நடத்தினர்.இதில் அக்னி தீர்த்த புரோகிதர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம், செயலர் சுந்தரேசன், பொருளாளர் ரமணி உட்பட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.