பதிவு செய்த நாள்
21
மார்
2020
11:03
சபரிமலை : சபரிமலையில் மார்ச், 29ல் துவங்க உள்ள பங்குனி உத்திர திருவிழாவில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை, என, கேரள தேவசம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். விழா நிறைவு பங்குனி உத்திர திருவிழாவுக்காக, மார்ச், 28 மாலை, 5:00 மணிக்கு, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. வரும், 29ம் தேதி காலை, 9:15 மணிக்கு கொடியேற்றுடன் துவங்கி, 10 நாட்கள் விழா நடக்கிறது. 10ம் நாளான ஏப்., 7ல், பம்பையில் ஆராட்டுக்கு பின், சுவாமி பவனி சன்னிதானம் வந்ததும், கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவு பெறும்.தேவசம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:பத்தணந்திட்டை மாவட்டத்தில், ஒன்பது பேருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், அங்கு அவசர கால தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால், இந்த ஆண்டு சபரிமலை ஆராட்டு திருவிழாவில், முக்கியமான சடங்குகள் மட்டுமே நடைபெறும்.ஒற்றுமைஇதில், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஏப்.,7ல், பம்பையில் நடக்கும் ஆராட்டிலும் யாருக்கும் அனுமதி கிடையாது. அரசின் இந்த முடிவுக்கு, பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக ஒற்றுமை மூலம், இந்த பேராபத்தை எதிர் கொள்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.