பதிவு செய்த நாள்
22
மார்
2020
03:03
ஊட்டி:ஊட்டி மாரியம்மன் கோவில், மாவட்ட நிர்வாகம் உத்தரவுபடி மார்ச், 31-ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.ஊட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 15ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நான்குநாட்கள் மட்டுமே, உபயதாரர்கள் இன் அம்மன் ஊர்வலம் நடந்தது.இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப் படி இந்த கோவில், 31 ம் தேதி வரை தற்காலிக மாக மூடப்பட்டுள்ளது.செயல் அலுவலர் களஞ்சி கூறுகையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மாரியம்மன் கோவில், 31ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தினசரி பூஜைகளை கோவில் பூஜாரிகள் சார்பில் நடத்தப்படும். பொதுமக்கள், உபயதாரர்களுக்கு, 31ம் தேதி வரை அனுமதியில்லை, என்றார்.