தம்பிக்கலையசுவாமி கோவிலில் மண்டலாபிஷேக விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2020 06:03
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே தம்பிக்கலையசுவாமி கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று காலை நடந்தது.
ஓலப்பாளையம், முருக்கங்காட்டுவலசு , தம்பிக்கலையசுவாமிக்கு கடந்த பிப்ரவரி 26 ம் தேதி இரண்டாவது மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தினசரி மதியம் 12 மணியளவில் மண்டல அபிஷேக விழா நடந்தது. 24 நாட்கள் முடிவுற்ற நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4.45 மணியளவில் யாக பூஜை துவங்கப்பட்டது. தொடர்ந்து தம்பிக்கலையசுவாமிக்கு 16 திரவியங்களில் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காவிரி, அமராவதி தீர்த்தங்களில் தீர்த்த அபிஷேகம் நடந்தது.சுவாமியை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அபிஷேக ஆராதனை நடந்தது.அணைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குலத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.