பதிவு செய்த நாள்
05
மே
2012
11:05
திருச்செந்தூர்:திருச்செந்தூர் அருகேயுள்ள எள்ளுவிளை ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.திருச்செந்தூர் அருகேயுள்ள எள்ளுவிளை ஸ்ரீமன்நாராயண சுவாமி கோயில் முன் மண்டபம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அன்று காலை கணபதிஹோமம், சுதர்சன ஹோமம், லெஷ்மி ஹோமம், வாஸ்து ஹோமம், பூர்ணாகுதி உட்பட்ட ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து மாலை சிறப்பு ஹோமம் மற்றும் கும்பம் நிறுவும் நிகழ்ச்சியும், மூலவர் எந்திரவைப்பு நிகழ்ச்சியும் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மறுநாள் காலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமம் நடந்தது. விமான கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் அன்னதானம் நடந்தது. விழாவில் கோயில் விழா கமிட்டியார் சதுரகிரி ராமலிங்கபுலவர், கணேசன், பொன்ஜெயபால், மயிலை செல்வராஜ், விமல்ராகவன், ராஜா, பால்த்துரை, பொன்ராஜா, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பொன்செல்வராஜ் செய்திருந்தார்.