கப்ளாம்பாடி கோவில் திருவிழாவில் குதிரை மீது பூங்கரகம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2012 11:05
அவலூர்பேட்டை:கப்ளாம்பாடியில் குதிரை மீது பூங்கரக ஊர்வலம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அடுத்த கப்ளாம்பாடி கிராமத்தில் வாழியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. கப்ளாம்பாடியிலிருந்து நேற்று காலை தாழங்குணம் பகுதியில் உள்ள வில்லியம்மன் மலை அடிவாரத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். வில்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.அங்கிருந்து பக்தர்கள் புடை சூழ குதிரையில் பூங்கரகத்தை ஜோடித்து ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். வழியில் மூன்று ஆடுகளை பலியிட்டனர். காளி அம்மன், வாழியம்மன் கோவிலிலிருந்தும் இரண்டு பக்தர்கள் தலை மீது பூங்கரகத்தை எடுத்து வந்தனர். பிற்பகலில் கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி முதுகில் கொக்கியுடன் தேர் இழுத்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., பஞ்சாட்சரம், நாட்டாண்மைகள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.