Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெய்வ சங்கல்பம் என்பதன் பொருள் என்ன? ராமநவமி: சொல்ல வேண்டிய போற்றி.. ராமநவமி: சொல்ல வேண்டிய போற்றி..
முதல் பக்கம் » துளிகள்
ராமநவமியை கொண்டாடுவது எப்படி?
எழுத்தின் அளவு:
ராமநவமியை கொண்டாடுவது எப்படி?

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
05:04

ஸ்ரீராமநவமி நடக்கவிருந்த நேரத்தில் காந்தியவாதி ஒருவர் மகாசுவாமிகளை தரிசிக்க காஞ்சிபுரம் வந்தார்.  தீவிர ராம பக்தரான காந்திஜி ‘ரகுபதி ராகவ ராஜாராம் பதீத பாவன சீதாராம்’ என்னும் பஜனைப் பாடலைத் தான் செல்லும் இடத்தில் எல்லாம் பாடி மக்களுக்கு ராம பக்தி, சுதந்திர உணர்வை ஊட்டியவர். மகாசுவாமிகளுக்கு காந்திஜி மீது மதிப்பு இருந்தது என்பதெல்லாம் நாம் அனைவரும் அறிந்த செய்தி.

இதையெல்லாம் சிந்தித்தபடி மகாசுவாமிகளை வணங்கிய காந்தியவாதி,  ஸ்ரீராமநவமியை எப்படி கொண்டாட வேண்டும் என சுவாமிகளிடம் கேட்டார்.
‘‘ஸ்ரீராம நவமியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கம்ப ராமாயணத்தில் ராமவதாரத்தை விவரிக்கும் பாடல்களைப் படிக்க வேண்டும். இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் விரதமிருப்பது அவசியம். எல்லா ஊர்களிலும் உள்ள பெருமாள் கோயிலிலோ அல்லது பஜனை மடத்திலோ ஒன்றாக கூடி ராம நாமத்தை ஐந்து நிமிடம் ஜபிக்க வேண்டும். அதன் பின், ‘ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்’  என்னும் 13 எழுத்துக்கள் கொண்ட மந்திரத்தை ஒருவர் சொல்ல மற்றவர்கள் அதைப் பின்பற்றிச் சொல்லியபடி ஊரைச் சுற்ற வேண்டும். முடிவாக பத்து நிமிடம் பஜனை பாடல்களைப் பாடி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். மறுநாள் காலையில் மீண்டும் அதே இடத்தில் கூடி, கம்ப ராமாயணத்தில் உள்ள ராம பட்டாபிஷேக பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். சம்ஸ்கிருதம் தெரிந்தவர்கள் வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் செய்யலாம். அதன்பின் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது நல்லது.  பட்டாபிேஷகத்தின் போது ராமனின் தலையில் வைத்த கிரீடத்தை, தங்களின் மீது வைத்ததாக எண்ணி எண்ணி மூவுலகமும் மகிழ்ந்ததாக கம்பராமாயணம் சொல்கிறது. மக்களின் மனதில் தெய்வ பக்தி, நன்னடத்தை வேரூன்றி வளரவேண்டும் என ஸ்ரீராமரை பிரார்த்திக்க வேண்டும்’’ என்றார். சுவாமிகளிடம் குங்குமப் பிரசாதம் பெற்ற அவர் ‘காந்திஜி கண்ட ராம ராஜ்ஜியம் உருவாக இதுவே வழி’   என்ற நம்பிக்கையுடன் விடை பெற்றார்.

 
மேலும் துளிகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இது ... மேலும்
 
temple news
பவுர்ணமியில் சந்திரன் 16 கலைகளுடன் பரிபூரணமாக பிரகாசிக்கும். இன்று கிரிவலம் சென்று வழிபட மனஅழுத்தம், ... மேலும்
 
temple news
இன்று பங்குனி பிரதோஷ விரதம். சிவனை வழிபட எல்லாம் நன்மையும் நடக்கும்.பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar