பதிவு செய்த நாள்
10
ஏப்
2020
03:04
நாமக்கல்: நாமக்கல் நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு, நாடக நடிகர் சங்கம் சார்பில், பாத பூஜை செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், நகராட்சி பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் துப்புரவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் நகராட்சியில், 39 வார்டுகளிலும், 700 பணியாளர்கள் சாலைகள், தெருக்களில் தூய்மை பணியை செய்து வருகின்றனர். அவர்களை கவுரவிக்கும் வகையில், மாவட்ட நாடக நடிகர் சங்க தலைவர் ராஜா, பொருளாளர் சுமதி ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகள், ஏ.எஸ்.பேட்டை அடுத்த கொளந்தான் தெருவில், 10 தூய்மை பணியாளர்களை அழைத்து வந்து, பாத பூஜை செய்தனர். மேலும், அவர்களுக்கு சால்வை, மாலை அணிவித்து, வேட்டி, சேலை வழங்கினர்.