பதிவு செய்த நாள்
10
ஏப்
2020
03:04
தர்மபுரி: தர்மபுரியில், விவசாய நிலத்தை உழவு செய்யும் போது கிடை த்த, இரண் டு அடி உயர உலோக அம்மன் சிலை , வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கபட்டது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த குட்டூரை சேர்ந்தவர் குமார், 40. இவர், தன் விவசாய நிலத்தில், சித்திரை மாத சாகுபடிக்கு, நேற்று டிராக்டர் மூலம் நிலத்தை உழவு செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென வித்தியாசமான சத்தம் கேட்டதால், டிராக்டரை நிறுத்தி விட்டு, நிலத்தை தோண்டினார். அங்கு, இடது கை மணிக்கட்டு உடைந்த நிலையில்,
இரண்டு அடி உயர உலோக அம்மன் சிலை இருந்தது தெரிந்தது. இதுகுறித்து அவர் அளித்த தகவலின்படி வருவாய்த்துறையினர் மற்றும் அதியமான் கோட்டை போலீசார் சம்பவ இடம் வந்தனர். அப்போது, அங்கு சூழ்ந்திருந்த கிராம மக்கள் , அம்மன் சிலைக்கு மஞ்சள் நீரில் அபிஷேகம் செய்து, அதிகாரிகளிடம் வழங்கினர். 22 கிலோ எடை யுள்ள இந்த அம்மன் சிலையை , நல்லம்பள்ளி தாசில்தார் சரவணனிடம் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ஒப்படைத்தனர்.