பதிவு செய்த நாள்
11
ஏப்
2020
02:04
சிந்தனை சிற்பிகளான சிம்ம ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் உள்ள ராகு மாதம் முழுவதும் நற்பலன் தருவார். 6ம் இடத்தில் உள்ள செவ்வாய் மே 3 வரையும், அதன் பிறகு 10ம் இடத்தில் உள்ள சுக்கிரனும் நன்மை தருவர். புதன் ஏப்.18 வரையும், மே4க்கு பிறகும் சாதகமாக இருந்து நன்மை அளிப்பார். ராகுவால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். செவ்வாயால் செயலில் வெற்றி உண்டாகும். பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். மே4க்கு பிறகு உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். மாத முற்பகுதியில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவப்பெயர் வரலாம். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். ஏப்.18 முதல் மே 4வரை கணவன், மனைவி இடையே இணக்கமான சூழல் இருக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும்.
பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். செவ்வாயால் பணிபுரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவி தேடி வரும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். ஏப்.18 முதல் மே4 வரை குடும்பத்தாரிடம் பொறுமையும், விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். முக்கிய பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். உடல்நிலை சீராக இருக்கும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு மே4 க்கு பிறகு தடையனைத்தும் நீங்கும். வங்கி நிதியுதவி கிடைக்கும்.
* வியாபாரிகளுக்கு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.
* தனியார்துறை பணியாளர்களுக்கு சகஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். கோரிக்கைகளை ஏப்.18க்குள் கேட்டு பெறவும்.
* ஐ.டி., துறையினருக்கு மே4 க்கு பிறகு புதனால் பிரச்னைகள் அனைத்தும் விலகும்.
* வக்கீல்கள் மே4 க்கு பிறகு தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர்.
* போலீஸ், ராணுவத்தினர் உயர்ந்த நிலையை அடைவர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மே 3க்குள் கேட்டு பெறவும்.
* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர்.
* கலைஞர்கள் எதிரி தொல்லை, மறைமுகப்போட்டியிலிருந்து மே3க்கு பிறகு விடுபடுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
* விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். சொத்து வாங்கும் எண்ணம் மே3க்குள் கைகூடும்.
* மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் வெற்றி காண்பர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் சிலருக்கு ஏப்.18 முதல் மே4 வரை பணம் விரயமாக வாய்ப்புண்டு.
* வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் மத்தியில் குழப்பம் உருவாகலாம். மனதில் இனம் புரியாத வேதனை ஏற்படலாம்.
* அரசு பணியாளர்கள் வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* தனியார்துறை பணியாளர்கள் ஏப்.18 முதல் மே4 வரை வேலைப்பளுவால் சிரமப்படுவர்.
* மருத்துவர்கள் பணியில் அதிக அக்கறையுடன் இருக்கவும். முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.
* வக்கீல்கள் அதிக முயற்சி எடுத்தால் தான் புதிய வழக்குகள் கிடைக்கும்.
* ஆசிரியர்களுக்கு எதிர்பார்த்த பதவிஉயர்வு கிடைக்காது. ஆனாலும் குருவின் பார்வையால் ஓரளவு துணைநிற்கும்.
* விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.
நல்ல நாள்: ஏப்ரல் 15,16,17,18,18,25,26,27,28,29 மே 1,2,3,6,7,13.
கவன நாள்: ஏப்ரல் 20,21,22 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் எண்: 2,4
பரிகாரம்:
* ஏகாதசியன்று பெருமாளுக்கு அர்ச்சனை
* சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடு
* தினமும் நீராடியதும் சூரிய நமஸ்காரம்