பதிவு செய்த நாள்
11
ஏப்
2020
03:04
தன்னலம் கருதாத தனுசு ராசி அன்பர்களே!
பெரும்பாலான கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை. அதற்காக கவலைப்பட வேண்டாம். இந்த மாதம் குருவால் குறையனைத்தும் தீரும். புதன் ஏப்.18 வரையும், மே4 க்கு பிறகும், செவ்வாய் மே 3க்கு பிறகும் நற்பலன் தருவர். குருவால் மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். ஏப்.16 க்கு பிறகு உறவினர்களிடம் சுமூகநிலை ஏற்படும். அவர்களால் உதவி கிடைக்கும். ஏப்.18க்கு பிறகு கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. சிறுசிறு பிரச்னைகள் வந்து மறையும். சனி, ராகுவால் உறவினர் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. வெளியூரில் தங்க நேரிடும்.
சிலர் தீயோர் சேர்க்கையால் அவதியுறுவர். மே 3க்கு பிறகு எடுத்த முயற்சி வெற்றி பெறும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பொருளாதாரம் மேம்படும். அபார ஆற்றல் பிறக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். பெண்கள் குடும்பத்தாரின் ஆதரவைப் பெறுவர். ஏப்.18 முதல் மே 4 வரை விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும் முக்கிய பொறுப்பை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். மே 3க்கு பிறகு தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். குடும்பத்தோடு புண்ணிய தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்புண்டு. உடல்நலனில் அக்கறை தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களைப் பொறுத்தவரை, மே 4க்கு பிறகு அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு மறையும்.
* வியாபாரிகள் முன்னேற்றம் பெறும் மாதமாக அமையும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். மே 3க்கு பிறகு ஆதாயம் அதிகரிக்கும்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு ஏப்.18 வரை கோரிக்கைகள் நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.
* ஐ.டி., துறையினர் மே4 க்கு பிறகு சகபணியாளர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
* மருத்துவர்களின் மேன்மையை அறிந்து எதிரியாக செயல்பட்டவர்கள் கூட சரணடையும் நிலை உருவாகும்.
* ஆசிரியர்கள் தடைகளை முறியடித்து நன்மை காண்பர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் .மே 4க்கு பிறகு அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தினருக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையிருக்காது.
* அரசியல்வாதிகளுக்கு மே3க்கு பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும். தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு மே3 க்கு பிறகு சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* மாணவர்கள் புதனின் சாதக பலனால் சிறப்பான முன்னேற்றம் காண்பர். தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காண்பர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் ஏப்.18க்கு பிறகு அலைச்சலைச் சந்திப்பர். சூரியனால் பகைவர் தொல்லை அதிகரிக்கும்.
* அரசு பணியாளர்கள் சகஊழியர்களிடம் அனுசரித்து போகவும். முக்கிய முடிவு எடுப்பதை தள்ளி போடுங்கள்.
* தனியார் துறை பணியாளர்கள் சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை ஏற்படலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும்.
* வக்கீல்களுக்கு விடாமுயற்சி இருந்தால் மட்டுமே புதிய வழக்குகள் கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு மே3 க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லை வரலாம்.
* மாணவர்கள் ஏப். 18 ல் இருந்து மே 4 வரை படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
நல்ல நாள்: ஏப்.14,18,19,25,26,27,28,29, மே 4,5,6,7,10,11,12
கவன நாள்: ஏப்.30, மே1 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை எண்:1,3
பரிகாரம்:
* ஞாயிறன்று ஏழைகளுக்கு கோதுமை தானம்
* சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு