நந்தியின் காதில் கோரிக்கையைக் கூறுகிறார்களே. இது சரியா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2020 04:04
இது எப்படி பழக்கத்திற்கு வந்தது என்றே புரியவில்லை. ஒருவேளை நந்திக்குக் காது செவிடு என்று கிளம்பி விட்டார்களோ என்னவோ? பாவங்கள் இரண்டு விதம். ஒன்று செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பது. மற்றொன்று செய்யக் கூடாததைச் செய்வது. இதில், இரண்டாவது தான் மிகப்பெரிய பாவம் என்கிறது தர்மசாஸ்திரம். நந்தி காதில் பிரார்த்தனையைச் சொல்லவே கூடாது. விக்ரகங்களைத் தொட்டு பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும். பிரதோஷத்தன்று நந்தி படும்பாடு மிகப்பாவமாகத் தான் இருக்கிறது.