ராமேஸ்வரத்தில் கோயில் தீர்த்தக் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2020 03:04
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் நம்புநாயகி அம்மன் தீர்த்த குளம் வறண்டு, பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால் துார்வார வேண்டும், என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான நம்புநாயகிஅம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இக்கோயில் அருகே உள்ள தீர்த்த குளம், தற்போது வறண்டுள்ளது. இக்குளத்தில் பக்தர்கள் நீராட முடியாத நிலையில், சகதியுடன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால் முகம் சுளிக்கின்றனர். எனவே, குளத்தை துார் வாரி சுத்தம் செய்து கோயில் புனிதம் காக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் தெரிவித்தனர்.