திருப்பதி இணையதளத்தில் 781 ஆன்மிக பதிப்புகள் வெளியீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2020 01:04
திருப்பதி :திருமலை திருப்பதி தேவஸ்தான இணைய தளத்தில் 7 மொழிகளில் 781 ஆன்மிக பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதிகாசங்கள், புராணங்கள் உள்ளிட்ட ஆன்மிக புத்தகங்களை பக்தர்கள் பதிவிறக்கம் செய்து படிக்கும் விதம் பல புத்தகப்பதிப்புகளை தேவஸ்தான இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுபோன்ற ஆன்மிக பதிப்புகளை படிக்க விரும்பும் பக்தர்கள், தேவஸ்தான இணைய தளத்தில் லாக்இன் செய்து இ-பதிப்புகள் பக்கத்திற்கு சென்று அங்கு தங்களுக்கு விரும்பும் மொழிகளை தேர்ந்தெடுத்து இந்த புத்தகங்களை பதிவிறக்கம் செய்து இலவசமாக படித்துக் கொள்ளலாம். இந்த பக்கத்தில். 7 மொழிகளில், 781 புத்தகங்கள் உள்ளது. மேலும் தேவஸ்தானம் மாதந்தோறும் வெளியிடும் சப்தகரி மாத இதழும், 6 மொழிகளில் வைக்கப் பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடு தழுவிய ஊரடங்கால், மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளதால், இதுபோன்ற ஆன்மிக புத்தகங்களை படித்து தங்கள் குழந்தைகளுக்கு நம் கலாசாரம் குறித்து அறிவுறுத்தலாம், என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.