ஸ்ரீவில்லிபுத்துாரை ஆய்ப்பாடியாகவும், அங்குள்ள கண்ணன் கோயிலை நந்தகோபன் மாளிகையாகவும், தன்னையும், தன் தோழியரையும் ஆயர் சிறுமியராகவும் கருதினாள் ஆண்டாள். அவளது பாடல்களான திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாடல்கள் கண்ணன் மீது அவள் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்துகின்றன. ‘‘ கண்ணனின் இதழைச் சுவைக்கும் பாக்கியம் பெற்ற வெண்ணிறச் சங்கே! அவனது வாய், பச்சைக் கற்பூரம் போல மணக்குமா அல்லது தாமரைப்பூ போல மணக்குமா! அவனது பவளம் போன்ற சிவந்த வாய் தித்திப்பாக இருக்குமா! உன் அனுபவத்தை நானும் அடைய விருப்பமுடன் கேட்கிறேன். நல்ல சேதி சொல்ல மாட்டாயா?’’ எனக் கேட்கிறாள். ..........................