திருப்பரங்குன்றம்: மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு திருப்பரங்குன்றம் சுவாமிகள் புறப்பாடு ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டது. ஆண்டுதோறும் பெற்றோர் திருக்கல்யாணத்தில் பங்கேற்க திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாள் புறப்படுவர். திருக்கல்யாணத்தில் பங்கேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் குன்றத்து சுவாமிகள் பங்கேற்று 4 நாட்களுக்குப் பின் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்புவர்.ஊரடங்கால் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணம் மட்டும் கோயிலுக்குள் நடக்கிறது. இதனால் குன்றத்து சுவாமிகள் புறப்பாடும் ரத்து செய்யப்பட்டுள்ளது என கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.