தண்ணீர் விஷயத்தில் ஒருவருக்கொருவர் உதவுவது அவசியம்.இறந்த மனிதன் ஒருவன் இறைவன் முன் கொண்டு செல்லப் பட்டான். அவனிடம், நான் ஒருமுறை உன்னிடம் தண்ணீர் கேட்டும் தரவில்லையே என்றான். “இறைவா! உலகத்தின் அதிபதி நீயே!. இங்குள்ள அனைத்தும் உனக்கே சொந்தம். அந்நிலையில் நான் எப்படி தண்ணீர் தர முடியும்? எனக் குழம்பினான். தன்னுடைய அடியவரின் பெயர் ஒன்றைச் சொல்லி, குறிப்பிட்ட இந்த நபர் இந்த நாளில் இந்த நேரத்தில் குடிக்கத் தண்ணீர் கேட்டும் தரவில்லையே என்றான். அந்த சம்பவம் அவனுக்கும் நினைவுக்கு வந்தது. “அவனுக்கு தண்ணீர் கொடுத்திருந்தால் இப்போது என்னிடம் நன்மை கிடைத்திருக்கும் என்றான். இனி மேலாவது தாகம் எனத் தண்ணீர் கேட்டவருக்கு மறுக்காமல் கொடுத்து நன்மை பெறுங்கள்.