காரியாபட்டி: காரியாபட்டி அச்சங்குளத்தில் சீதாராமர் கோயிலில் உள்ள ராமானுஜருக்கு 1003வது ஆண்டு ராமானுஜர் ஜெயந்தியை முன்னிட்டு, திருமஞ்சனம் மற்றும் தீப ஆராதனை, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. சங்கர ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி சேர்ந்து வருவது சிறப்பு. ஏற்பாடுகளை சுந்தர கணபதி ஐயர் செய்திருந்தார்.