ஈரோடு: முஸ்லிம்களின், புனித பண்டிகையான ரம்ஜான் துவங்கியது. முஸ்லிம்களின் புனித பண்டிகையான ரம்ஜான், பிறை பார்த்து அடுத்த நாள் முதல், 30 நாட்களுக்கு நோன்பு இருந்து கடைபிடிக்கப்படும். இதன்படி கடந்த, 24 இரவில் ரம்ஜான் பிறை தெரிந்ததால், அன்று முதல் நோன்பு முறையாக கடைபிடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அரசு ஹாஜி முகம்மது பாயத்துல்லா அறிவுறுத்தலின்படி, நோன்பு நாட்களில், வீட்டில் இருந்தபடி தொழுகைகளை மேற்கொண்டு வருகின்றனர்.