சீர்காழி கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2020 02:04
சீர்காழி : சீர்காழி சட்டைநாத சுவாமி கோயிலில் எளிமையாக நடைபெற்ற திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன குருமகாசன்னிதானம் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
நாகை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி பிரம்ம புரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர் என லிங்கம், குரு, சங்கமம் என்று மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் தோன்றிய ஞானசம்பந்தருக்கு, பார்வதிதேவி, சிவபெருமானுடன் காட்சிக் கொடுத்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினார். இதனால் ஞானம் பெற்ற திருதிருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் முதல் தேவாரப் பதிகமான தோடுடைய செவியன் என்ற பதிகத்தைப் பாடினார். இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் சித்திரை மாதம் இக்கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக்க ரையில் திருமுலைப்பால் விழாவாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அரசு தடை விதி த்துள்ளது. ஆனால் வழக்கம் போல் பூஜைகள் நடத்த அனுமதித்துள்ளது. இதனையடுத்து பல்லாயிரக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் அரசு உத்தரவுப்படி இந்த ஆண்டிற் கான திருமுலைப்பால் விழா ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து பலநூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி இவ்வாண்டு தடைபடக்கூடாது என்ற நோக்கில் அரசின் வழிகா ட்டுதலைப் பின்பற்றி திருஞானசம்பந்தரை மலைக்கோவிலில் உள்ள தோணியப்பர் சன்னதியில் எழுந்தருளச்செய்து ஆகம விதிகளின்படி தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் ஓதுவார்கள் தேவார பதிகம் பாட அர்ச்சகர்கள் வேத மந்திரம் ஓத உமையம்மை திருஞான சம்பந்தருக்கு தங்கக் கிண்ணத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது. இதில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், திருமடத்து நிர்வாகிகள் மற்றும் கோயில் நிர் வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.