பதிவு செய்த நாள்
29
ஏப்
2020
02:04
சென்னை:மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை சென்றவர்கள், அரசு மானியம் கோரி, விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் தலங்களுக்கு, புனித யாத்திரை சென்றோருக்கு, மானியம் வழங்கும் திட்டத்தை, அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது. ஆண்டு தோறும், மானசரோவர் சென்றவர்களில், 500 பேருக்கு, தலா, 40 ஆயிரம் ரூபாய்; முக்திநாத் சென்றோருக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய், அரசு மானியமாக வழங்கப்படுகிறது. அதன்படி, மானசரோவர், முக்திநாத் தலங்களுக்கு, 2019 ஏப்., முதல்,2020 மார்ச், 31 வரை யாத்திரை சென்றவர்கள், மானியம் கோரி விண்ணப்பிக்க, ஏப்., 30 வரை அவகாசம் வழங்கப்பட்டது.ஊரடங்கால், இத்திட்டத்திற்கு தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்க முடியாமல், யாத்திரை சென்றவர்கள் தவித்து வருகின்றனர். எனவே, ஊரடங்கிற்கு பின், விண்ணப்பிக்க போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என, கோரியுள்ளனர்.