பதிவு செய்த நாள்
03
மே
2020
11:05
டேராடூன் : மே.4 முதல் கேதார்நாத் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என உத்தர்கண்ட் அரசு தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவாலயங்களான கேதார்நாத் கோயில் பனிமூட்டம் காரணமாக, 6 மாதங்கள் மூடப்பட்டு இருக்கும். மீண்டும் ஏப்ரல்-மே மாதங்களுக்கு இடையே அக்கோவில்கள் திறக்கப்படும். அதன்படி கடந்த ஏப். 29-ல் கேதார்நாத் கோவிலின் நடை திறக்கப்பட்டு கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.கோவில் கமிட்டி ஊழியர்கள், நிர்வாக அதிகாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் மட்டும் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று முதல்வர் திரிவேந்திரசிங் ராவத் கூறியது, கோயில் அமைந்துள்ள மாவட்டம் கொரோனா தாக்கம் இல்லாத பச்சை மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இதையடுத்து நாளை (மே.4), கேதார் நாத் கோயிலில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் அப்போது பொதுமக்கள் சமூகவிலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார்.