* மனிதனுக்கு பொறுமை மிக அவசியம். பொறுமையுள்ளவன் என்றும் தோற்பதில்லை. * ஆராய்ச்சியின் மூலம் கடவுளை அறிய முடியாது. அன்பால் மட்டுமே உணர முடியும். * அநியாயம், பொய்யைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது. * விவேகம் இல்லாவிட்டால், பண்டிதனாகப் பட்டம் பெற்றிருந்தும் பயனில்லை. * கடவுளை முழுமையாக நம்பினால் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். * எதையும் எதிர்பார்க்காத துாய பக்தியே எல்லாவற்றிலும் சிறந்தது. * எவ்வளவு தான் துன்பம் வந்தாலும் ஞானி கலங்குவதில்லை. * விவேகம், நம்பிக்கை இல்லாவிட்டால் ஆன்மிக வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாது. * பெண், பொன் ஆசை தான் மனிதனை கடவுளிடமிருந்து பிரிக்கிறது. * விவேகம் ஏற்படாவிட்டால் சாஸ்திரங்களின் உட்பொருளை உணர முடியாது. * எண்ணத்தைப் பொறுத்தே மனிதனின் வாழ்வு அமைகிறது. * ஞானத்தின் முதல் அடையாளம் சாந்தம். இரண்டாவது ஆணவம் இல்லாமல் இருப்பதாகும். * கடவுள் என்னும் எஜமானருக்கு தொண்டனாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள். * வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டே கடவுளைச் சிந்திப்பவனே வீரமுள்ள பக்தன். * கடவுள் மீது அசையாத நம்பிக்கை இருந்தால் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. * அக்கறை இல்லாதவனுக்கு எளிய விஷயம் கூட கைகூடுவதில்லை. * நீ நல்லவனாக இருந்தால் கடவுள் அருளால் உன் மனைவி, மக்களும் நல்லவராக இருப்பர். * உலகப் பற்றில் இருந்து விடுபடாமல் கடவுளை அடைய முடியாது.