திருப்புகழில் பாடல் முடிவில் "பெருமாளே என முடிகிறதே..
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2020 04:05
என்ன சம்பந்தமா? முருகன் திருமாலின் மருமகன் அல்லவா? பெருமாள் என்பது இறைவனுக்குரிய பொதுப்பெயர். சிறப்புப் பெயராகத் திருமாலைக் குறிக்கும். சிவன் விஷ்ணு என்ற பெயர்கள் கூட இலக்கண அடிப்படையில் பொருள் பார்த்தால் எல்லா தெய்வங்களுக்கும் பொருந்தும். குணத்தின் சிறப்பைக் கொண்டு காரணப் பெயராய் தனி ஒரு தெய்வத்தின் திருநாமமாயிற்று. அருணகிரிநாதர், பேதமின்றி எல்லாக் கடவுளரையும் திருப்புகழில் பாடுவதைக் காணலாம்.