கடவுளுக்கு காணிக்கை பணம் செலவுக்கு எடுப்பது பாவமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2020 04:05
அதிபத்தர் என்ற நாயன்மார் மீன்பிடி தொழில் செய்துவந்தார். இவர் வலையில் விழும் முதல் மீனை "சிவனுக்கு என்று கூறி கடலிலேயே விட்டுவிடுவார். இறைவன் சோதனை செய்ய விரும்பினார். வறுமையைக் கொடுத்தார். ஒருநாள் வலையில் ஒரு தங்க மீனை முதல் மீனாக விழச்செய்தார். அதையும் இறைவனுக்கு என்று கடலில் விட்டுவிட்டார். இதுதான் திடமான பக்தி. இப்படி பக்குவப்பட்ட பக்தி இருந்தால் நாம் தெய்வநிலைக்கு உயர்ந்துவிடலாம். அதிபத்தருக்கு ஈசன் அம்மையப்பராக காட்சி கொடுத்து சகல ஐஸ்வர்யங்களையும் அருளினார். நாயன்மார் நிலைக்கு அவரை உயர்த்தினார். இப்போது என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்களேன்.