பிரார்த்தனை, என்பது தமக்கு நலன் கிடைக்க வேண்டியும் செய்யலாம். எல்லோருக்கும் நலன் கிடைக்க வேண்டியும் செய்யலாம். தொண்டு என்பது பிறருக்கு உதவுவது மாத்திரம் அல்ல. கோயில் வழிபாடும் ஒரு தொண்டு தான். நாயன்மார்களைக் கூட திருத்தொண்டர்கள் என்று தானே சொல்கிறோம். எனவே, மக்களுக்காக இறைத் தொண்டு (பிரார்த்தனை) செய்வதே உயர்ந்தது. "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதில் பிரார்த்தனையும் தொண்டும் இணைந்திருப்பதைப் பாருங்கள்.