குல தெய்வ வழிபாடு இன்றி செய்யும் எந்த பிரார்த்தனையும் நிறைவேறாது என்பது ஐதீகம் என்பது மட்டுமல்ல. நிஜமும் கூட. நம்முடைய முன்னோர்கள் எந்த தெய்வத்தைக் காலம் காலமாக வழிபட்டு வந்தார்களோ அந்த தெய்வ அருளைப் பெறுவது நம் வம்சவிருத்திக்கு மிகவும் அவசியம். ஸ்தல யாத்திரையாக திருப்பதி போன்ற புண்ணியத்தலங்களுக்குச் செல்லும் முன் குலதெய்வத்தை வணங்க வேண்டும். குல தெய்வம் தெரியாவிட்டால் மனதிற்கு பிடித்தமான தெய்வத்தையே ஏற்றுக்கொள்ளுங்கள். நான் சிபாரிசு செய்வது வெங்கடாஜலபதியையும், சாஸ்தாவையும் தான்.