""மானிடப்பிறவி தானும் வகுத்தது மணவாக்காயம் ஆனிடத்தைந்தும் ஆடும் அரன் பணிக்காகவன்றோ என்கிறது சைவ சிந்தாந்தம். உயிர்கள் பரிசுத்தமான பிறகு மீண்டும் இப்பூமியில் பிறந்து துன்பப்படாமல் இறைவனோடு கலந்து பேரின்ப நிலையை அடையலாம். உயிர்கள் பக்குவமடைவதற்கே இறைவன் படைத்தல் முதலாகிய முத்தொழில்களைச் செய்கிறார். உயிர்களின் பணி இறைவனுக்குப் பணி செய்வது தான் என்கிறது அப்பாடல்.