திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதலை முன்னிட்டு அம்மன் ராஜ அலங்காரத்தில்அருள்பாலித்தார்.
சித்திரை வளர்பிறை பஞ்சமி திதியன்று பூச்சொரிதல் நடைபெறும்.விழாவில் மாட்டு வண்டி பந்தயம், பால்குடம், பூத்தட்டு, இசை,நாடக, பாடல் ஆகிய நிகழ்ச்சிகள், மின்னொளி அலங்காரம், தண்ணீர் பந்தல், திருவிழாக் கடைகள், வீடுகளில் விருந்து என்று களை கட்டும். கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கோயில் கதவு பூட்டப்பட்டு விழா ரத்தான அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. எனினும் பெண்கள் கோயில் முன் மூலவர் சன்னதிக்கு எதிராக பூக்களை கொட்டி அம்மனை தரிசித்து சென்றனர். இந்த ஆண்டு விழா ரத்தானாலும் மூலவர் அம்மனுக்கு வழக்கமாக நடைபெறும் பூஜை மட்டும் நடந்தன.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷகம் நடந்து சந்தனக் காப்பில் வெள்ளி அங்கி அணிந்து பச்சைப் பட்டுடுத்தி காணப்பட்டார். பகல் 3:00 மணிக்கு குங்குமம்,மஞ்சள் உள்ளிட்ட 11 வித பொருட்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.