Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகனின் பிற பெயர்களும் அதன் ... பட்டாபிஷேகத்தில் மதுரை மீனாட்சிக்கு வேப்பம் பூ மாலை அணிவிப்பது ஏன்? பட்டாபிஷேகத்தில் மதுரை ...
முதல் பக்கம் » துளிகள்
சர்வம் கிருஷ்ணார்பணம் இதை முதலில் கூறியது யார்?
எழுத்தின் அளவு:
சர்வம் கிருஷ்ணார்பணம் இதை முதலில் கூறியது யார்?

பதிவு செய்த நாள்

12 மே
2020
02:05

சர்வம் கிருஷ்ணார்பணம் என்று சொன்னவன் கர்ணன். முன்னொருநாளில் அந்தணரால் கொடுக்கப்பட்ட சாபத்தால் போர் தருவாயில் கர்ணனின் தேர் சகதியில் சிக்கிக் கொள்கிறது. பரசுராமரின் சாபத்தால் முக்கியமான தருணத்தில் அஸ்திரத்திற்கான மந்திரம் கர்ணனுக்கு மறந்து போகிறது. கர்ணன் உடல் மீது அர்ஜுனனின் அம்புகள் தைத்தது. ஆனாலும் உயிர் பிரியவில்லை.

அந்தனராக வந்த கிருஷ்ண பகவான்: பின்பு கிருஷ்ணபகவான் அந்தணர் வேடத்தில் கர்ணன் முன் தோன்றி தான் மலைகளில் தவம் பூண்டிருப்பதாகவும் கர்ணனின் கொடை குறித்து அறிந்ததால் கர்ணனிடன் யாசகம் பெற வேண்டி வந்ததாக உரைக்கிறார். இந்த இடத்தில் கிருஷ்ண பரமாத்மா பொய் உரைப்பதாக தோன்றும். ஆனால் அவ்வாறு அல்ல. பகவான் அனைவர் மனதிலும் நித்தம் நித்தம் தவம் செய்து கொண்டுதான் இருக்கிறார். அதை நாம்தான் உணர மறுக்கிறோம்.

சர்வம் கிருஷ்ணார்பணம்: யாசகம் கேட்டு வந்திருப்பது அந்தணர் அல்ல கிருஷ்ணர்தான் என்றுணர்ந்த கர்ணன். என்னிடம் இல்லாததை கேட்டு என்னை இல்லை என்று சொல்ல வைத்துவிடாதே என்று அந்தணர் வேடம் பூண்ட கிருஷ்ண பரமாத்மாவை பணிகிறான். கிருஷ்ணரும் “நீர் செய்த புண்ணியத்தை கொடுப்பாயா” என்று வினவிகிறார். அதற்கு கர்ணன் “நான் செய்த, செய்யும், செய்யப் போகும் புண்ணியம் அனைத்தையும் உனக்கு தருகிறேன்” என்று இதயத்தில் தைத்த அம்பை எடுத்து தனது குருதியின் வாயிலாக தர்மம் செய்கிறான். அந்த சமயத்தில் கிருஷ்ணரை பார்த்து சர்வம் கிருஷ்ணார்பணம் என்று கூறுகிறான். யாசகத்தை பெற்றுக் கொண்டு தனது விஸ்வரூபத்தை கர்ணனுக்கு காட்டுகிறார். கர்ணன் பரவச நிலை அடைந்து “எனக்கு முக்தி வேண்டும் அப்படி முக்தி இல்லை என்றால் வரும் பிறப்புகளிலும் இல்லை என்று சொல்லா இதயம் வேண்டும் என்று வரம் கேட்கிறான். கிருஷ்ணரும் அருள்கிறார். இங்கே யாசகம் கொடுக்கும் போது கிருஷ்ணரின் கை தாழ்கிறது. கர்ணனின் கை உயருகிறது. கர்ணனுக்கு ஒரு ஆசை உண்டு. அது யாதெனில் எல்லாருக்கு யாசகம் செய்தாயிற்று, கிருஷ்ண பகவானுக்கு மட்டும் யாசகம் செய்யவில்லை என்பதுதான். பகவான் கிருஷ்ணன் தன் பக்தனுக்காக இங்கே தன்னை தாழ்த்திக் கொள்கிறார்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 
temple news
விநாயகரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவது சிறப்பு விநாயகரை வழிபட சிறப்பான நாள் சதுர்த்தி தினம். ... மேலும்
 
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 
temple news
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி ... மேலும்
 
temple news
மார்கழி தேய்பிறை ஏகாதசி உத்பன்னா மற்றும் உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகில் தோன்றிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar