Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

துலாம்:  குடும்பத்தில் மகிழ்ச்சி துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தனுசு: வாகன யோகம் தனுசு: வாகன யோகம்
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை)
விருச்சிகம்: பதவி உயர்வு வருது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2020
17:30

இந்த மாதம் புதன் மே24 முதல் சாதகமான இடத்துக்கு மாறுகிறார். சுக்கிரன் ஜுன்4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது. மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது அவசியம். ராசிநாதனான செவ்வாய் பெரிய பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்வார். சுக்கிரனால் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். குறிப்பாக ஜுன் 4வரை அவர்களால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் மாத முற்பகுதியில் புதனால் வீட்டில் பிரச்னை ஏற்படலாம். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். இதற்கு காரணம் புதன் 7ம் இடத்தில் இருப்பதே. ஆனால் மே 24க்குப் பிறகு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை மறையும். உங்களின் முயற்சியில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். சிலரது வீட்டில் பொருள் திருட்டு போக வாய்ப்புண்டு. உறவினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.

பெண்களுக்கு சுக்கிரனால் ஆடம்பர வசதி பெருகும். மனதில் மகிழ்ச்சி குடியிருக்கும். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். மே 24க்குப் பிறகு சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குடும்பத்தில் இருந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.  சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜுன் 4க்கு பிறகு மற்றவர் மத்தியில் பெருமையாக பேசப்பட்டாலும், குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லாவிட்டால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். உடல்நிலை அதிருப்தி அளிக்கலாம். சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். செவ்வாயால் வயிறு தொடர்பான உபாதை வரலாம் பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள்  முக்கிய பொறுப்புகளை பெண்களின் வசம் ஒப்படைத்தால் அது சிறப்பாக முடியும். தொழில்ரீதியான பயணம் வெற்றி பெறும்.
* தனியார் துறை பணியாளர்கள் மே24க்கு பிறகு புதனால் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம்.
* ஐ.டி., துறையினர் பணியில் முன்னேற்றம் காண்பர். சகஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். முக்கிய கோரிக்கைகள் நிறைவேறும்.
* வக்கீல்களுக்கு மே 24க்குப் பிறகு தாங்கள் நடத்தும் வழக்குகள் சிறப்பாக அமைந்திருக்கும். சாதகமான தீர்ப்பும் கிடைக்கும்.
* பொதுநல சேவகர்களுக்கு திறமை பளிச்சிடும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்
* கலைஞர்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கையெழுத்தாகும்.
* விவசாயிகளுக்கு வேலை கடினமாக இருந்தாலும் வருமானம் குறையாது. மஞ்சள், பாசிப்பயறு, கம்பு, கேழ்வரகு மூலம் அதிக மகசூலைக் காண்பர்.  மே 24க்குப் பிறகு கால்நடை  வகையில் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
   பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மே 24க்கு பிறகு கல்வியில் சிறப்படைவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

சுமாரான பலன்கள்
* மின்சாரம், நெருப்பு தொடர்பான பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
* மருத்துவர்களுக்கு பொறுமையும், நிதானமும் தேவை. பணியில் பிடிப்பு இல்லாத நிலை ஏற்படலாம்.  வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும். சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்கலாம்.
* ஆசிரியர்கள் அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.
* அரசு பணியாளர்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும். யாருடைய உதவியையும் நாடாமல் தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள்.
* போலீஸ், ராணுவத்தினர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம்.
* தொழிலதிபர்களுக்கு மறைமுக எதிரிகளால் பிரச்னை வரலாம். வீண் அலைச்சல் ஏற்படலாம். .சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர்.
* வியாபாரிகளுக்கு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* தரகு, கமிஷன் தொழிலில் அதிக முயற்சி எடுத்தே வாடிக்கையாளர்களை தக்க வைக்க வேண்டியதிருக்கும்.
* அரசியல்வாதிகள் எந்த விஷயத்திலும் விழிப்டுன் இருக்கவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
* விவசாயிகள் புதிய சொத்து வாங்க இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும்.

நல்ல நாள்: மே 14,20,21,22,23,24,29,30,31, ஜுன் 1,,6,9,10
கவன நாள்: மே 25,26 சந்திராஷ்டமம்  
அதிர்ஷ்ட எண்: 7,8 நிறம்: வெள்ளை, பச்சை

 பரிகாரம்:
* தினமும் நீராடியதும் சூரிய தரிசனம்
* சனிக்கிழமையில் அனுமன் வழிபாடு
* ஏகாதசியன்று பெருமாளுக்கு விரதம்

 
மேலும் வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை) »
temple
பொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு ... மேலும்
 
temple
இந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 10ம் இடத்தில் இணைந்திருக்கும் புதன், சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.