வீரங்கிபுரம் அய்யனார் கோவில் திருவிழாவில் கோலப்போட்டி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2012 11:05
கண்டாச்சிபுரம்:வீரங்கிபுரம் அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி கோலப்போட்டி நடந்தது.கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம் அய்யனாரப்பன், பிடாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 6ம் தேதி துவங்கியது. மூன்றாம் நாள் திருவிழாவான நேற்று வீரங்கிபுரம் இளைஞர்கள் சார்பில் நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். நேற்று நடந்த கோலப்போட்டியில் பள்ளி ஆசிரியை சூடிக்கொடுத்த சுடரொளி, கல்பனா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். விழா ஏற்பாடுகளை அய்யப்பன், குமார், திருமலை, சக்திவேல் ஆகியோர் செய்திருந்தனர்.