மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பிரிவாக இருப்பது சுருளிமலை. இங்கு சுருளியாண்டவர் என்னும் பெயரில் முருகன் கோயில் கொண்டிருக்கிறார். இங்குள்ள தீர்த்தம் சுருளி அருவி. இங்குள்ள மூலிகை காடுகளில் வீசும் காற்று புத்துணர்ச்சி, ஆரோக்கியத்தை தரவல்லது. இங்கு முருகன் குகையில் கோயில் கொண்டிருக்கிறார். மற்றொரு குகையில் கைலாச நாதர் அருள்புரிகிறார். இக்குகைக்கு ‘கைலாசப்புடவு’ எனப்படுகிறது. சனிதோஷத்தால் அவதியுற்ற தேவர்கள், சுருளிமலை முருகனிடம் தஞ்சம் அடைந்து துயர் தீரப் பெற்றனர். இதனடிப்படையில் சனியால் பாதிப்பு நீங்க பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர்.