திருப்பரங்குன்றத்தில் முதலில் தரிசிக்க வேண்டிய தெய்வம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2020 04:05
திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனை முருகன் தலையில் குட்டி, சிறையில் அடைத்தார். இது சரிதான் என்ற போதும், வயதில் மூத்த ஒருவரை இளையவர் ஒருவர் தண்டிப்பது உலக வழக்கமல்ல என்பதால் இந்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி, பரங்கிரி என அழைக்கப்பட்ட திருப்பரங்குன்றம் மலையில் அவர் சிவனை வேண்டி தவமிருந்தார். சிவனும், அம்பிகையும் அங்கு தோன்றி முருகனுக்கு அருள் புரிந்தனர். பரங்கிரிநாதர், ஆவுடைநாயகி என்ற பெயரில் அங்கு தங்கினர். அந்த கோயிலே காலப்போக்கில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலாக மாறியது. திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க செல்லும் முன் இங்கு சென்று சிவபார்வதி தரிசனம் பெற வேண்டும் என்பது ஐதீகம்.