இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழா ஆவணி மகம் நட்சத்திரத்தில் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று துவங்கியதை முன்னிட்டு சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் அதிகாலை உற்ஸவர்கள் ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன், மாறநாயனார், புனிதவதி அம்மனுக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு ஞானாம்பிகை அம்மன் சன்னதி முன்புற மண்டபத்தில் அலங்காரத்தில் எழுந்தருளினர்.
கைலாய வாத்தியங்கள் முழங்க அபிஷேக,ஆராதனை, பூஜை,திருமுறை பாராயணம்,இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 9:00 மணிக்கு நாயன்மாருக்கு சிவபெருமான் காட்சியளித்தலும் சிவனடியார்களின் வீதி உலாவும் நடைபெற்றது.