Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இடும்பன் கோரக்கரின் குரு பக்தி கோரக்கரின் குரு பக்தி
முதல் பக்கம் » பிரபலங்கள்
பதிவிரதை காந்தாரி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 மே
2012
01:05

காந்தாரி. இவள் காந்தார தேசத்து மன்னன் சுபலனின் மகள் . மிதிலை நகரத்துப் புதல்வி மைதிலியைப் போல், காந்தார தேசத்தின் புதல்வியானாள், அவள். தந்தைக்கு மகள் என சுருங்கிவிடாமல், விரிவான தேசத்தின் மகள் என தேசம் காப்பவளாகத் தோற்றமளித்தாள். பீஷ்மரின் அறிவுறுத்தலால் திருதராஷ்டிரரை கணவராக ஏற்றாள் காந்தாரி. கணவர் பார்வையில்லாதவர் எனத் தெரிந்ததும், தனக்கும் பார்வை தேவையில்லை எனத் தன் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு, பதிவிரதையின் அறத்துக்கு ஏற்ப வாழ்ந்தாள், இவளின் அளவுக்கு, சிறப்பு கொண்ட பதிவிரதை எவரும் இல்லை. ஒருமுறை, கடும் பசியுடன் காந்தாரியின் வீட்டுக்கு வந்தார் வியாசர். அவளும் அவரை அன்புடன் உபசரித்தாள். இதில் மகிழ்ந்த வியாசர், நூறு குழந்தைகளைப் பெறுவாய் ! என அருளினார். அதன்படி கருவுற்றவளுக்குப் பேறுகாலம் தாமதமானது. இந்த நிலையில், குந்திதேவி குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த விவரம் அறிந்து கலங்கினாள்; பொறாமைப்பட்டாள். ஆத்திரத்துடன் தனது வயிற்றைத் தானே அடித்துக்கொண்டதில், உள்ளேயிருந்த மாமிசப்பிண்டம் வெளியே வந்தது. அப்போது அங்கே தோன்றிய வியாசர், 101 மடக்கில் நெய் விட்டு நிரப்பினார்; மாமிசப் பிண்டத்தை குளிர்ந்த நீரில் கழுவி, 101 பாகமாகப் பிரித்து, நெய்யிலிட்டுப் பாதுகாத்தார். காலம் கனிந்ததும், அவை 101 குழுந்தைகளாக உருப்பெற்றன. முதல் மடக்கில் தோன்றியவன் துரியோதனன்; கடைசி மடக்கில் உருவானவள் துச்சலா (விஞ்ஞானம் அறிமுகம் செய்த டெஸ்ட்டியூப் பேபி, விந்து வங்கி, இன்குபேட்டர் போன்றவற்றின் முன்னோடி !) திருதராஷ்டிரரும் பாண்டுவும் வியாசரின் அருளில் தோன்றியவர்கள், குந்தி மற்றும் மாத்ரிக்குப் பிறந்தவர்களும் தேவாம்சம் பொருந்தியவர்கள் (பாண்டவர்கள்).

அதாவது, இணைப்பில் பிறக்காமல், அருளில் பிறந்தவர்கள், துரியோதனன் பிறந்த வேளையில், அபசகுனம் தென்பட... குறிப்பறிந்த அறிஞர்கள், குலத்தை அழிவில் இருந்து காப்பாற்ற, அவனைத் துறக்கும்படி பரிந்துரைத்தனர். ஆனால், கணவனும் மனைவியும், துரியோதனனை இழக்க விரும்பவில்லை. ஆனால் நாம் ஒன்று நினைக்க, தெய்வம் வேறொன்றை நினைக்கும் அல்லவா ? ! பாரதப் போரில், துரியோதனனுடன் சேர்ந்து, மற்ற மகன்களும் மாண்டனர். ஒரு மகனை இழக்க விரும்பாத மனம். நூறு பேரையும் இழந்த துயரத்தைச் சந்தித்தது. துயரத்தில் மூழ்கியுள்ள பெரியன்னையைச் சந்திக்க பாண்டவர்கள் தயங்கினர். காந்தாரி தங்களைச் சபித்துவிட்டால் என்ன செய்வது என்று பயம் ! பிறகு, ஸ்ரீகிருஷ்ணர் அவளைச் சந்திக்க... அவன் சாந்தமானதும் திருதராஷ்டிரரின் அனுமதியுடன் காந்தாரியைச் சந்தித்தனர். அவர்கள் பயந்தது போலவே, அவளும் ஆத்திரத்துடன் சபிக்க முற்பட்டாள். வியாசர் அவளைச் சமாதானப்படுத்தி, கௌரவர்கள் தினமும் உன்னை அடிபணியும்போது, அறம் இருக்கும் இடத்தில் வெற்றி உண்டு என வாழ்த்தினாய். அதன்படி, அறம் வென்றது. எனவே சினம் வேண்டாம் என்றார். பீமன், அறத்துக்குப் புறம்பாக யுத்தத்தில், தொப்புளுக்குக் கீழே கதையைப் பயன்படுத்தினான். அதை எப்படிப் பொறுப்பது ? என்று காந்தாரி வினவ, பீமன் மன்னிப்புக் கேட்டான், அத்துடன், சூது விளையாட்டு மற்றும் திரௌபதியின் வஸ்திராஹரணம் ஆகியவை அறத்துக்குப் புறம்பானவை என வாதிட்டான் பீமன். இதில் கோபமுற்றவள், துச்சாதனனின் ரத்தத்தைக் குடித்தாய். உன்னை எப்படி மன்னிப்பது ? எனக் கத்தினாள். உடனே அவன், அவனது ரத்தம் என் பற்களைக் கடந்து உள்ளே செல்ல வில்லை. கைகள் ரத்தத்தில் தோய்ந்திருந்தன. அந்தக் கைகளால், அவிழ்ந்த உனது கேசத்தை சேர்த்து வைக்கிறேன் என்று சொன்ன வாக்குறுதிப்படி, திரௌபதியின் தலையில் ரத்தத்தைப் படியச் செய்தேன் என்றான். இதன் பிறகு காந்தாரி, தருமரை அழைக்க.... உங்கள் மைந்தர்களை அழித்தது தவறுதான்; மன்னியுங்கள் எனச் சொல்லி, அவளது காலில் விழுந்தார் தருமர். அவளது காலைத் தொட்டதும் தருமரின் கால் நகங்கள் கறுத்துப் போயின. காந்தாரியின் கோபமும் தணிந்தது.

வேதவியாசர், காந்தாரிக்கு திவ்ய திருஷ்டியை அளித்தார். போரில் தோற்றவர்களையும், இறந்தவர்களையும் கண்டு கவலையானாள். சிதையில் எரியும் கணவன்மார்களின் உடல்களை வலம் வந்துகொண்டிருந்த இளவயதுப் பெண்களைப் பார்த்ததும், ஸ்ரீகிருஷ்ணரை ஆவேசத்துடன் பார்த்தாள். இத்தனைத் துயரங்களுக்கும் நீயே காரணம் ! நான் பதிவிரதை என்பது உண்மையானால், எனது வம்சத்தில் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மாண்டதுபோல, நீ தோன்றிய யாதவ வம்சத்து சகோதரர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு சாகவேண்டும். நீயும் காட்டில், தனிமையில் மரணத்தைச் சந்திப்பாய் எனச் சபித்தாள். யுத்தத்தைத் தவிர்த்திருக்க உன்னால் முடியும். ஆனால், குரு வம்சம் அழிவதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் நீ என கிருஷ்ணரை நிந்தித்தாள். ஸ்ரீகிருஷ்ணர் பொறுமையுடன், தாங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், இவை முன்பே நிச்சயிக்கப்பட விஷயங்கள் நடந்துதான் தீரும் ! என்றார். காந்தாரியின் சாபம்.... யாதவர்களையும் கண்ணனையும் பாதித்தது. பதிவிரதையின் சாபம் பலிக்காமல் போகாது. துளசியின் சாபத்தால் கண்ணன் பாதிக்கப்பட்டார் என்கிறது புராணம். பதிவிரதையரின் சரிதம், பாரதப் பண்பாட்டின் பெருமைக்கு எடுத்துக்காட்டு ! பிறவியில் பார்வையை இழந்தவன், ஒருகட்டத்தில், தினசரி வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடித்துவிடுவான். அவனது துயரமும் மாறி விடும். ஆனால், உலகைப் பார்த்து ரசித்த கண்கள், பார்வையை இழந்தால், தடுமாற்றம் நிகழும்; ஆறாத் துயரமாகிப் போகும். பார்வை இருந்தும், அதைக் கணவரின் நிலை கருதி பயன்படுத்தாமல் இருந்தது, அசாதரணமான விஷயம். இப்படி, இரண்டு மனங்கள் ஒன்றாவது, தாம்பத்தியத்தின் சிறப்புக்கு அடித்தளம். கணவரைப் பின்பற்றுகிற விஷயத்தில், தனது துயரத்தை அவள் பொருட்படுத்தவில்லை, பதிவிரதைக்கு ஆகச்சிறந்து எடுத்துக்காட்டு, காந்தாரி ! திருதராஷ்டிரருடன் இணைந்து மகாபாரதத்துக்கு வித்திட்டவள் காந்தாரி. எங்கே அறம் உள்ளதோ, அங்கே வெற்றி என்பதை நடத்திக் காட்டியவள் அவள். எதிரிகளைச் சந்தித்த காந்தாரி, எரிந்து விழாமல், அவர்களையும் அரவணைத்துச் செயல்பட்டாள். அறம் எனும் குறிக்கோளுடன் வாழ்பவர்கள், தாம் துயரத்தைச் சந்தித்தாலும் பிறரைத் துயரப்படுத்த மாட்டார்கள். துயரத்தின் தாக்கம், கோபத்துக்கு வடிகாலாக மாறினாலும், பிறகு அவர்களையும் அணைத்துக்கொள்கிற பாங்கு. பாரதத்தில் பிறந்த பெண்மணியின் மிகச் சிறந்த குணம்; அந்த நற்குணத்துக்குச் சொந்தக்காரி, காந்தாரி!

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar