புத்தேரி பெருமாள் கோவிலில் சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2020 12:06
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி ேஷத்திரம், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் வெற்றி விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது.
இதனை முன்னிட்டு, நேற்று காலை 10:00 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு; 10:30 மணியளவில் தீபாராதனை நடந்தது. காலை 10:45 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள வெற்றி விநாயகர் சுவாமிக்கு அபிேஷகம்; 11:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, உலக மக்கள் நலன் வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. பூஜையின்போது, பக்தர்கள் இன்றி, அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர். சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் குழு தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.