குருவாயூர்: கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை கேரள அரசும் ஏற்பதாக கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி ராஜேந்திரன் அறிவித்துள்ளார். திருச்சூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து அந்த மாவட்டத்தில் அமைந்துள்ள குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் கடந்த 9 ம் தேதி பக்தர்களுக்காக திறக்கப்பட்டது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாக கோவிலில் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி இல்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இதேபோல் சபரிமலையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்ற தந்திரி மோகனரு கண்டரரு கூறியதையும் கேரள அரசு ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.